என் அண்ணன் பப்புவா? மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

என் அண்ணன் பப்புவா? மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற மக்களைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசியிருந்தார்.இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் சர்ச்சையை எழுப்பினர். பிறகு குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்

தாய் மறைவின் போதும் கூட.. தளராத பிரதமர் மோடி.. காணொலி வாயிலாக திட்டங்களை  தொடங்கி வைத்தார் | PM Modi will inaugurate the welfare scheme to be  launched in West Bengal today through ...

இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கி தண்டனையை நிறுத்தி வைத்தது.இதனைத் தொடந்து ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்தது. சூரத் நீதிமன்றம் 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இந்த தகவல் வெளியானதும் பல்வேறு தரப்பினர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கறுத்து தெரிவித்து வருகின்றனர்.

எங்கள் குடும்பத்தையே அவமானப்படுத்திய பிரதமர் மோடி! மேடையிலேயே உருகிய பிரியங்கா  காந்தி..கடும் தாக்கு | PM Narendra Modi has insulted our family and didnot  registerd a ...

இந்த நிலையில் ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். போராட்டத்தில் பேசிய அவர், என் அண்ணன் உல்கின் தலைசிறந்த ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்புகளை படித்து முடித்துள்ளார். ஆனால் அவரை சிலர் 'பப்பு' என அழைக்கிறார்கள்.

அவர் நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் அவருடன் பல லட்சம் மக்கள் நடந்து வந்ததை பார்த்து அவர் பப்பு இல்லை என்பதை பாஜகவினர் தெரிந்துகொண்டனர். ராகுல் காந்தி ஏழை மக்களின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும் புரிந்து அது குறித்து பேசி வருகிறார். அதனால் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.

Kanimozhi Joins Rahul Gandhi In Bharat Jodo Yatra.. Kamal To Join Yatra  Tomorrow At Delhi | Bharat Jodo Yatra: இந்தியா முழுதும் சூடுபிடிக்கும்  யாத்ரா... ராகுல் காந்தியுடன் இன்று கனிமொழி ...

மேலும் படிக்க | ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு : இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கருத்து

நாடாளுமன்றத்திலும் பாஜகவினர் பதில் அளிக்க முடியாத வகையில் அவர் கேள்விகள் கேட்டார். அதனால் அவரைப் பார்த்து பயந்து அவரை நாடாளுமன்றத்துக்குள் வரவிடாமல் செய்வதற்காகவே தகுதி நீக்கம் செய்துள்ளனர்” என்று விமர்சித்துள்ளார். பட்டப்படிப்பு குறித்து பேசி மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ள அவரின் பேச்சை பலர் பகிர்ந்து வருகின்றனர்.