உடுமலையில் பயன்படுத்த முடியாத நிலையில் பூங்காக்கள் மாயமாகும் அவலம்

உடுமலையில் பயன்படுத்த முடியாத நிலையில் பூங்காக்கள் மாயமாகும் அவலம்

நகராட்சி குடியிருப்புகளில் பூங்கா மேம்படுத் திட்டம் பல ஆண்டுகளாயக கிடப்பில் போடப்பட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.உடுமலை நகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டுகளில் 300க்கும் மேற்பட்ட லேஅவுட் கல் உள்ளன இதில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இடம் ஆக்கிரமிப்பால் மாயமானது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டது

மேலும் படிக்க | ஆஸ்ரமத்திற்கு நிதி கேட்டு வீணாக தகராறில் பெண்கள் ஈடுப்பட்டதால் பரபரப்பு

இதில் 61 மனைப் பிரிவுகளில் பூங்கா இடம் ஆக்கிரமப்பட்டு வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.இவ்விடங்களை நீக்கும் வகையில் முதற்கட்டமாக நகராட்சி சார்பில் பூங்கா இடங்களில் தகவல் பலகை வைக்கப்பட்டது
அதில் அவ்விடத்துக்கான வரைபடம் பரப்பளவு உள்ளிட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்தன மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து இடங்களிலும் பூங்கா அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியில் திர்மானமும் நிறைவேற்றப்பட்டது
ஆனால் போதுமான நடவடிக்கை. எடுக்கப்படாமல் பூங்கா இடங்களில் மீண்டும் ஆக்கறிப்பு அதிகரித்துள்ளது தகவல் பல கைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு குடியிருப்புகளில் பூங்காவுக்கான இடங்களை முழுமையாக மீட்பது கேள்விக்குறியாக உள்ளது.

குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலை


அதே வேளையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காக்களின் நிலையும் தொடர் பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.
எஸ் என் ஆர் லேஅவுட் ஸ்ரீநகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.சில இடங்களில் பூங்காவின் கம்பி வேலி சிதைக்கப்பட்டு குடிமகன்களுக்கு மட்டுமே பயன்படும் இடமாக மாறப்பட்டுள்ளது. இதனால் அனைத்து குடியிருப்புகளிலும் பொழுதுபோக்கு இடமில்லைாமல் மக்கள் அதிருப்திக் குள்ளாகியுள்ளார்
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு மக்கள் அனுப்பி உள்ள மனுவில் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும்.

பூங்காவில் சேதம்

ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காவில் சேதம் அடைந்துள்ளது உபகரங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ள பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கைவசம் முழுமையாக சென்று விடும் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாக வாயிலாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
 இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது