"கலாசாரம் தொியாமல் அமைச்சா்கள் இருப்பது வெட்கக்கேடு" - தமிழிசை சௌந்தரராஜன்

” சிலர் ‘சன்’ -ஆக இருப்பதனால் அவர்களால் சன்னியாசி ஆக முடியாது,...”

"கலாசாரம் தொியாமல் அமைச்சா்கள் இருப்பது வெட்கக்கேடு" - தமிழிசை சௌந்தரராஜன்

நாட்டின் கலாசாரங்கள் தெரியாமல் தமிழ்நாட்டில் அமைச்சர்கள் இருப்பது வெட்கக்கேடானது என தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் விமா்சித்துள்ளாா்.

சென்னை தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆகாச வாணி மற்றும் பிரசார் பாரதி சார்பில் ஜி 20 மாநாடு  குறித்த நிகழ்ச்சிகள் நிறைவு விழா நடைபெற்றது.தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, விஞ்ஞானி நம்பி நாராயணன் , இயக்குனர் பேரரசு ஆகியோர் பங்கேற்பு. மேலும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி பின் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்:- 

ஜி 20 குறித்து காணொளி ஒளிபரப்பியது மிகவும் உபயோகமாக இருந்தது. ஐஐடி இயக்குனர் காமகோடி அவர்கள்  ஜி20 கல்வியும் குறித்து மிகவும் அழகாக பேசினார்.

 ஒரு பழமொழி சொல்வார்கள்:-  "எலி வலையானாலும் தனி வலை வேண்டும்", "வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்" என்பார்கள்.ஆனால் பிரதமர்  அந்த கனவை நனவாக்கி இருக்கிறார்கள். தமிழகத்தினுடைய செங்கோல் டெல்லி  பாராளுமன்றத்தில் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் முக்கியத்துவம் பெறுகிறது நம் தமிழகம்.செங்கோல் சபாநாயகர் அருகில் இருக்கிறது. அது  இருந்து கொண்டிருக்கிறது எப்போதும் இருக்கும். ஒரு சிலர் சூரியனை சின்னமாக வைத்திருக்கிறார்கள் அவர்கள் சுவரில் மட்டுமே வரைய முடியும். நாங்கள் சூரியனுக்கே செல்ல தயாராகி விட்டோம்.

"நிலா நிலா ஓடி வா என்று பாடிய நாம் இன்று நிலாவிற்கே ஓடி வருகிறோம்". உலகில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களையும் 20 அடி நடராஜர் வரவேற்க இருக்கிறார். இந்தியாவில் எங்கும் சிவன் தான் இருப்பார் ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் நடராஜர் இருப்பார்.

உலகத்திலேயே சிறந்த பிரதமராக பாரத பிரதமர் மோடி திகழ்கிறார். பிரதமர் அவர்கள்  இந்தியாவில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு தமிழகம் தான் என்றார். பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை, தலவிருட்சம், குடவோலை முறை குறித்தும் பேசினார்.

நம் இந்திய கலாச்சாரங்கள் தெரியாமல் தமிழ்நாட்டில் அமைச்சர்கள் இருப்பது வெட்கக்கேடானது. சிலர் ’சன்’ ஆக இருக்கிறார்கள் அவர்களால் ஒருபோதும் சன்னியாசியாக முடியாது. ஜி20 உச்சி மாநாடு நிகழ்வு டெல்லியில்  நடைபெறுகிறது. இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் ஜி 20 நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அவற்றில் 700 கலைஞர்கள் பங்கு பெற்றனர். அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் பெருமை உயர்ந்து நிற்கிறது.

ஒரு காலத்தில் மேட் இன் சைனா மிகப்பெரிய அளவில் இருந்தது. தற்போது மேட் இன் இந்தியா என்று மாறிவிட்டது. மாற்றங்கள் நம்மிடமிருந்து தான் துவங்க வேண்டும். எனவே இளைஞர்களாகிய நீங்கள் நீரை சேமிக்க வேண்டும், சூரிய ஒளி சக்தி சிறிது பயன்படுத்துங்கள், செல்போன் குறைந்த நேரம் பயன்படுத்துங்கள் என்றார்.

இதையும் படிக்க   | "தெரு முனை கூட்டத்தை கூட நடத்த முடியாத ஓபிஎஸ், தாக்கத்தை எப்படி ஏற்படுத்துவார்" ஜெயக்குமார் கேள்வி!!