''தமிழில் பேச வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது'' இல.கணேசன் சோகம்!

''தமிழில் பேச வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது'' இல.கணேசன் சோகம்!
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்திலிருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தமிழில் பேச வாய்ப்பு இல்லாமல் போனது  வருத்தமளிப்பதாக நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் பேசியுள்ளார்.

மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நாகாலாந்து மாநில ஆளுனர் இல கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டப் படிப்பை முடித்த 2,372 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் பேசிய இல கணேசன், தொடக்கத்தில் ஆங்கிலத்தில் சிறிது நேரம் பேசினார். பின்னர், அங்கிருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு தமிழில் பேச ஆரம்பித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் பேச, தமிழ் பேசும் அவையோருக்கு முன்பாக தமிழிலே ஒரு சில வார்த்தைகள் கூட பேசாமல் செல்வது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தமிழில் பேச வாய்ப்பே இல்லாத நிலையில் வெகுஜன மக்கள் முன்பு தமிழில் பேசாமல் இருப்பது வெட்கமாக உள்ளது எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com