'பேட்ட' படத்தில் மறக்க முடியாத காட்சி இதுதான்... ஆனா நாங்க யோசிச்சதே வேற... கார்த்திக் சுப்புராஜ் பதில்!!

'பேட்ட' படத்தில் மறக்க முடியாத காட்சி குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார் அந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

'பேட்ட' படத்தில் மறக்க முடியாத காட்சி இதுதான்... ஆனா நாங்க யோசிச்சதே வேற... கார்த்திக் சுப்புராஜ் பதில்!!
கடந்த 2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் 'பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் வசூல் அதிகம் செய்தாலும், விமர்சன ரீதியாக பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ரஜினி ரசிகர்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை, ஆனாலும் மீண்டும் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' நேரடியாக ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்து வருகிறது.
 
இதில் "’பேட்ட’ படத்தில் உங்களால் மறக்க முடியாத காட்சி என்றால் எதைச் சொல்வீர்கள்" என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், கடைசியில் அந்த ராமன் ஆண்டாலும் பாடல் தான் என மறக்கமுடியாத காட்சி. முதலில் அந்த காட்சிக்கு நானும் அனிருத்தும் பேசி ஒரு இசையைத் தயார் செய்தும் விட்டோம். நாயகன் பல வருடங்கள் மனதில் இருந்த பகையைத் தீர்த்து விட்டு, வில்லனைக் கொன்று விட்டு வந்த பிறகு உற்சாகமாக டான்ஸ் ஆட வேண்டும். ருத்ர தாண்டவம் போல மனதில் வைத்திருந்தேன். ஆனால் எங்களுக்கு ராமன் ஆண்டாலும் பாடலை அங்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணமே இல்லை. 
 
அதை ரஜினி சார் கேட்டார். யோசனையாக எல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால் இது க்ளைமேக்ஸ் காட்சி. படம் முடிந்து வீட்டுக்குச் போகும் ரசிகர்கள் உற்சாகமாகச் செல்ல வேண்டும். இது போன்ற இசை இருக்கக் கூடாது என சொன்னார். அதுமட்டுமல்ல வேறொரு பழைய பாடலை உத்தேசித்தார். அதை ரீமிக்ஸ் செய்யலாமே என்றார். அப்படின்னா ராமன் ஆண்டாலும் பயன்படுத்தலாமே என்று நான் சொன்னேன், அதற்கு அவர் சம்மதித்தார் என இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.