முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி...!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி...!
Published on: 
Updated on: 
1 min read

டெல்லி மக்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராடியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில், டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக எம்.பி.க்கள் வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர்ச்சியான ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, நிதிஷ் குமார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com