வேலைக்கு நிலம்... தொடரும் சிபிஐ ரெய்டு....!!!

வேலைக்கு நிலம்... தொடரும் சிபிஐ ரெய்டு....!!!
Published on
Updated on
1 min read

நிலமோசடி வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதலமைச்சர்களும், கணவன் மனைவியுமான லாலுபிரசாத் - ராப்ரி தேவி இல்லத்தில் CBI சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 முதல் 2009ம் ஆண்டுவரை மத்திய ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக ஆட்சேர்ப்பு மற்றும் நிலத்திற்கு பதிலாக வேலை வழங்குவதாகக்கூறி மோசடி என பல குற்றங்கள் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக லாலு பிரசாத்,  அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி, உள்ளிட்ட 14 பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பீகார் முன்னாள் முதலமைச்சரும், லாலு யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியின் இல்லத்துக்கு இன்று காலை சிபிஐ குழு சென்றடைந்தது.  முன்னதாக ஆகஸ்ட் மாதம், இதே வழக்கில், லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பலரின் வீட்டிற்கு சிபிஐ குழுவினர் இணைந்து சோதனை நடத்தினர். 

பின்னர் பீகாரில் மட்டுமல்ல, பீகாருக்கு வெளியேயும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.  பீகார் துணை முதலமைச்சரும் லாலு யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவின் குருகிராம் மாலுக்கும் சிபிஐ சென்றுள்ளது.  இது தவிர ஆர்ஜேடி எம்பிக்கள் அஷ்பக் கரீம், ஃபயாஸ் அகமது, எம்எல்சி சுனில் சிங் மற்றும் சுபோத் ராய் ஆகியோரின் வீடுகளுக்கும் சிபிஐ குழுக்கள் சென்றடைந்தன. இந்த வழக்கில் முன்னாள் ஆர்ஜேடி எம்எல்ஏ போலா யாதவையும் சிபிஐ கைது செய்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com