உடன்பிறப்புகளாய் இணைவோம்...... விதிமுறைகளை வெளியிட்ட திமுக பொது செயலாளர் துரைமுருகன்!!!

உடன்பிறப்புகளாய் இணைவோம்...... விதிமுறைகளை வெளியிட்ட திமுக பொது செயலாளர் துரைமுருகன்!!!

திமுக வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற திட்டம் ஏப்ரல் 3 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் பளவ விழாவை முன்னிட்டு திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.  குறிப்பாக ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை  உறுப்பினர்களை சேர்க்கும் பணி உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற திட்டத்தின் மூலம் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். 

இந்த நிலையில் இந்த உறுப்பினர் சேர்க்கைகளுக்கான விதிமுறைகளை திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  திமுக  உறுப்பினர்களாக இல்லாதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும் எனவும் உறுப்பினர் கட்டணம் பத்து ரூபாய் செலுத்த வேண்டும்.  உறுப்பினர் சேர்க்கை படிவத்திற்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு 25 ரூபாய் செலுத்த வேண்டும். 

உறுப்பினர்களுக்கான கட்டணத் தொகையை மணியாடர், டி.டி, மூலம் அனுப்புகின்றவர்கள் அந்த கட்டணத் தொகை விவரத்தையும் மணியாடர் ரசீது அல்லது டிடி என்னையும் அதற்கென்று படிவத்தில் உள்ள கட்டணத்திற்குள் குறித்து அனுப்ப வேண்டும்.  விதி.5 பிரிவின்படி உறுப்பினர்களை அவர்கள் குடும்பத்தில் இருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினர்களாக சேரலாம்.

உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் கட்டாயம் குறிப்பிடுவதுடன் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், எண், புகைப்படம் உள்ள முதல் பக்கத்தினை மட்டும் நகல் எடுத்து இணைத்திட வேண்டும்.   விதி.5 பிரிவு 3யின்படி உறுப்பினர் பதிவு தாளில் சம்பந்தப்பட்ட வார்டு கிளையின் நிர்வாகிகள் அந்தந்த பகுதியைச் சார்ந்த அமைப்பு நிர்வாகிகள், மாவட்ட கழக, மாநகர மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பகுதி நிர்வாகிகள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், அந்த பகுதி சார்ந்த கழக சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இதற்கு முன்னதாக நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் எவரேனும் ஒருவர் கையொப்பமிட்டு உறுப்பினர் விண்ணப்ப படிவங்களில் பரிந்துரை செய்யும் தகுதி பெற்றவராவர். 

உறுப்பினர்கள் படிவம் பூர்த்தி  செய்தவுடன் காலந்தாமதமாகாமல் மொத்தமாக சேர்த்து வைக்காமல் உடனுக்குடன் தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.  உறுப்பினர் விண்ணப்ப படிவங்களையும் அதற்கு கட்டண தொகையினையும் பொதுச் செயலாளர் திமுக தலைமை நிலையம் அண்ணா அறிவாலயம் 367 369 அண்ணா சாலை தேனாம்பேட்டை 600018 என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.   உறுப்பினர் படிவங்களுடன் உறுப்பினர் கட்டணத் தொகை தலைமை கழகத்திற்கு கிடைத்த பின்னரே படிவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பரிசளித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட படிவங்களில் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பவனி வந்த முருகன்...