ஜி20 மாநாடு: குடியரசு தலைவா் அளிக்கும் விருந்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்!!

ஜி20 மாநாடு: குடியரசு தலைவா் அளிக்கும் விருந்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்!!
Published on: 
Updated on: 
1 min read

ஜி20 மாநாட்டை முன்னிட்டு வரும் 9-ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவா் அளிக்கும் விருந்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா். 

டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி முதலமைச்சா் மு.க.ஸ்டாலினும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி செல்லவுள்ளாா். மேலும் அவா் வரும் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்கவுள்ளாா் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அதற்கான அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதில் பாரத் என பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com