'மாலை முரசு' செய்தி எதிரொலி...! ; கன்னியாகுமரியில் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உத்தரவு....!

'மாலை முரசு'  செய்தி எதிரொலி...! ; கன்னியாகுமரியில் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உத்தரவு....!
Published on
Updated on
1 min read

மாலை முரசு தொலைக்காட்சி செய்தி எதிரொலியால், கன்னியாகுமரி ஹை கிரவுண்ட் பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என  பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள், கன்னியாகுமரி ஹை கிரவுண்ட் பகுதியில் உள்ள கடல் அரிப்பு தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் கொட்டிவருவதாக புகார் எழுந்ததைக் குறிப்பிட்டு,  மாலை முரசு  செய்தி வெளியிட்ட நிலையில்,  உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் அந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டது. 

கன்னியாகுமரி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் பிரிக்கப்பட்டு, பேரூராட்சி குப்பை வாகனங்கள் மூலம் அவற்றை சேகரித்து சிலுவை நகர் பகுதியில் கொட்டி தரம் பிரிக்கப்படுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக, கன்னியாகுமரி ஹை கிரவுண்ட் பகுதியில் உள்ள கடல் அரிப்பு தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் அந்த குப்பைகள் கொட்டப்பட்டு வந்துள்ளது.  

மேலும் இது குறித்து பல புகார்கள் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடமே குப்பை மேடாகக் காட்சியளித்தது. இந்நிலையில் இதனை வீடியோவாக அருகே உள்ள நபர்களால் எடுக்கப்பட்டது.  பின்பு மாலை முரசு தொலைக்காட்சி அந்த காட்சிகளை நேரடியாக வெளியிட்டது. 

அதனைத் தொடர்ந்து, இன்று மாலையில் அந்த இடத்தை சுத்தம் செய்ய பேரூராட்சி நிர்வாகம்  உத்தரவிட்டதையடுத்து , தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றினர். அந்த காட்சிகளும் தற்போது வைரலாகி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com