சமாதானமாக மறுத்த மம்தா பானர்ஜி....எதற்காக பாஜகவினரின் இந்த சமாதான முயற்சி?!!

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் ஆகியோர் மம்தா பானர்ஜியை சமாதானப்படுத்த முயன்றனர்.

சமாதானமாக மறுத்த மம்தா பானர்ஜி....எதற்காக பாஜகவினரின் இந்த சமாதான முயற்சி?!!

நாட்டின் ஏழாவது வந்தே பாரத் ரயில் சேவை, மேற்குவங்கத்தின் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கொல்கத்தாவில் ஜோகா - தராட்டலா வழித்தடத்தின் மெட்ரோ ரயில் சேவை, ரயில்வேதுறை சார்பில் அமைக்கப்பட்ட 4 திட்டப்பணிகளும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காணொளி வாயிலாக:

இந்நிகழ்வை பிரதமர் மோடி நேரில் சென்று தொடங்கி வைப்பதாக இருந்தது. மோடியின் தாய் ஹீராபென் இன்று காலை உயிரிழ்ந்ததால், தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடியால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து குஜராத்தில் இருந்தவாறு காணொளிக்காட்சி வாயிலாக அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சமாதான முயற்சி:

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் ஆகியோர் மம்தா பானர்ஜியை சமாதானப்படுத்த முயன்றனர்.  ஆனால், மம்தா, விழா மேடைக்கு செல்ல மறுத்து, மேடைக்கு முன் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

நடந்தது என்ன?:

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் கலந்துகொள்ள ஹவுரா ஸ்டேஷனில் சென்றுள்ளார்.   அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்க ரயில் நிலையத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தில் சிலர் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மம்தா பானர்ஜி விழா மேடையில் அமர மறுத்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பிஎஃப்ஐ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த என்ஐஏ....குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமா?!!!