தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ முற்றுகை போராட்டம்

தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ முற்றுகை போராட்டம்
Published on
Updated on
2 min read

வரி உயர்வை கண்டித்து முற்றுகை

தமிழக அரசு சொத்து வரி தொழில் வரி தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை கடுமையாக உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் குல் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை குண்டுகட்டாக தூக்கி காவல் துறையினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு

இரு தரப்பினருக்கும் தள்ளு முள்ளு

தமிழக அரசு சொத்து வரி தொழில் வரி தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை கடுமையாக உயர்த்தி அதை கண்டித்து புதுக்கோட்டையில் மா கம்யூனிஸ்ட் கட்சியினர்  நகராட்சி அலுவலகத்திற்குள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக குவிக்கப்பட்டு அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார் ஆனால் தொடர்ந்து அவர்கள் கலந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியே காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது இதனை தொடர்ந்து அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பெண்களையும் பெண் காவலர்கள் வுட்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது தற்போது தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே முற்றுகை போராட்டமானது நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com