கணித குறிப்புகள் காய்த்த மரம்...வித்தியாசமான முறையை கையாளும் பள்ளி...

கணித குறிப்புகள் காய்த்த மரம்...வித்தியாசமான முறையை கையாளும் பள்ளி...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி அரசு மேல்நிலைப்  பள்ளியில் கணித குறிப்புகள் காய்த்த மரம் மாணவிகளின் வித்தியாசமான மனப்பாடம் செய்யும் முறை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க | மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்..! ஞாயிறுகளில் உண்டா?


பொதுவாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோவில்களில் உள்ள மரங்களில் கயிறு, தொட்டில், மஞ்சள் நூல், இன்னும் பல்வேறு பொருட்களை கட்டி தொங்கவிட்டு பிரார்த்தனை செய்வது வழக்கம்.ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு கவிமணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகள் சற்று வித்தியாசமாக தங்களுக்கு வகுப்புகளில் ஆசிரியர்கள் நடத்தும் கணித பாடத்தின் குறிப்புகள் மறந்துவிடாமல் இருக்க அந்த குறிப்புகளை எழுதி அதனை பள்ளி வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் கட்டி விடுகின்றனர்,எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ உடனடியாக இடைவேளை நேரங்களில் அந்த மரத்திற்கு சென்று தாங்கள் எழுதிய குறிப்புகளை பார்த்து அதனை மனதில் பதிய வைத்துக் கொள்கின்றனர். மாணவிகளின் இந்த முயற்சியால் மூங்கில் மரம் முழுவதும் கணித குறிப்புக்களால் நிறைந்து காணப்படுகிறது. மாணவிகளை இந்த செயலை ஆசிரியர்களும் ஊக்குவித்து வருகின்றனர். இது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க | பன்றிக்காக அடுக்குமாடி கட்டிடமா? சீனாவை மிஞ்ச முடியாது போலயே!