"எனக்கே நீங்கள் தான் ஆறுதல் சொல்ல வேண்டும்" அமைச்சர் துரைமுருகன் பேச்சு!!

"எனக்கே நீங்கள் தான் ஆறுதல் சொல்ல வேண்டும்" அமைச்சர் துரைமுருகன் பேச்சு!!
Published on
Updated on
1 min read

நெஞ்சுவலியால் உயிரிழந்த சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகத்தின் நினைவஞ்சலி கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாளன்று சென்னை மெரினாவில் நடைபெற்ற அமைதி பேரணியில் கலந்து கொண்ட போது சென்னை மாநகராட்சி 146 வது மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சன்முகம் கீழே விழுந்து நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

அவரது 16ஆம் நாள் நினைவஞ்சலி ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன் நேரில் சென்று சண்முகம் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அங்கு அழுதபடி அமர்ந்திருந்த அவரது மனைவிக்கு அமைச்சர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

அப்பொழுது பேசிய பேசிய அமைச்சர் துறை முருகன், "ஆறுதல் சொல்லக்கூடிய அளவுக்கு நான் இல்லை. ஏனென்றால், எனக்கே நீங்கள் தான் ஆறுதல் சொல்ல வேண்டும். ஆலப்பாக்கம் சண்முகம் அந்த அளவுக்கு எங்களோடு நெருங்கியிருந்தவர். அவரது மறைவு என்பது எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

மேலும், மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்தபோது, ஆலப்பாக்கம் சண்முகம் மறைந்துவிட்டார் என்பது இன்னும் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com