நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை: ரூ.85.22 கோடி நிதி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை: ரூ.85.22 கோடி நிதி  ஒதுக்கீடு


முதலமைச்சர் உத்தரவு

 தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்கள், மாநில நகர்ப்புர உள்கட்டமைப்பு  மேம்பாட்டு நிதியின் கீழ் 6 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில், ஆற்றல்திறன் கொண்ட தெருவிளக்குகளை அமைக்கும் பணிகளுக்கு ரூ.85.22/- கோடி நிதி ஒதுக்கீடு செய்து  உத்தரவிட்டுள்ளார்கள்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தூத்துக்குடி ரூரல் மற்றும் முத்தையாபுரம்  போன்ற பகுதிகள் கடந்த 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் மழைநீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியது.

இம்மாநகராட்சியில் 2022-2023-ம் ஆண்டிற்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின்கீழ் ரூ.49.00 கோடி மதிப்பீட்டில் 47.063 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

மேலும், ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொகுதி 4ல் முதற்கட்டமாக நான்கு சிப்பங்களாக ரூ.82.98 கோடி மதிப்பீட்டில் 36.36 கி.மீ நீளத்திற்கு கீழ்க்கண்ட விவரப்படி மழைநீர் வடிகால் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com