மத்திய சிறையில் இஸ்லாமியர்களின் தொழுகைக்கு அனுமதி உண்டு..!

மத்திய சிறையில் இஸ்லாமியர்களின் தொழுகைக்கு அனுமதி உண்டு..!
Published on: 
Updated on: 
1 min read

வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமியர்களின் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் விஷமதனமான குற்றச்சாட்டு என மத்திய சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும், சிறை விதிகளின்படியும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள வழக்கத்தின் படியும் எவ்வித மாற்றமுமின்றி முழுமையாக இயங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமலான் காலத்தில், நோன்பிருக்கும் இஸ்லாம் சிறைவாசிகள் தங்களுக்கான உணவை தனியாக சமைத்துக் கொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com