"தி கேரளா ஸ்டோரி"  திரையரங்கத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சி...!!

"தி கேரளா ஸ்டோரி"  திரையரங்கத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சி...!!
Published on
Updated on
2 min read

"தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை அமைந்தகரையில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கை முற்றுகையிடும் போராட்டமானது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

சுதிப்தோ சென் இயக்கத்தில் விபூத் அம்ருத்லால் தயாரிப்பில் தயாராகி உள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம். சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் தவறான கருத்துக்களை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பரப்புவதாக குற்றச்சாட்டு முன்வைக்க பட்டதால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் "அனைவருக்கும் தெரிந்தது போல் நம் நாடு மதச்சார்பின்மை கொண்ட நாடு. இப்போது ஆட்சி நடத்துபவர்களுக்கு மதம்தான் முக்கியம். அதைத் தவிர எதுவும் அவர்களுக்கு கவலை கிடையாது. இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சி பொறுப்பேற்று பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது. அவர்களது ஆட்சி ஹிட்லரின் ஆட்சி போல் ஒரு கொடுங்கோல் ஆட்சியாய் உள்ளது.

ஹிட்லருடைய ஸ்வஸ்திக் உத்திரத்தை அவர்களது கொடியில் வைத்து ஆட்சி செய்யும் இவர்களும் அதையே தான் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அழித்து ஒழிப்பது தான் நோக்கமாய் கொண்டுள்ளனர், அவர்களுக்கு எதிரான நோக்கை நாட்டு மக்களிடம் கற்பிக்கிறோம். 

ஒவ்வொரு தேர்தல் காலகட்டத்திலும் புர்கா, காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்கள் வெளியாகின்றன. தற்போது கர்நாடக தேர்தல் வரும் சமயத்தில் கேரளா ஸ்டோரியை வைத்து சர்ச்சை செய்கின்றனர்" என குற்றம் சாட்டினார்.

மேலும், "கேரளாவில் இருக்கும் 32000 பெண்கள் இளைஞர்களை மதம் மாற்றி வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தீவிரவாத பயிற்சிகளை அளித்து நம் நாட்டுக்கே திருப்பி வைப்பதாக அந்தப் படத்தில் சித்தரிக்கப் பட்டுள்ளது. அந்தப் படத்தில் save your daughters என ஓர் வசனம் வருகிறது. அதையே தான் நானும் சொல்கிறேன் இந்த படத்தை பார்க்காமல் தடுத்து நம் மக்களை காப்பாற்றுவோம்" எனக் கூறினார்.

தொடர்ந்து, பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட உயர்ந்தவன் தாழ்ந்தவன் என ஹிந்து மதம் மட்டுமே சொல்கிறது. அதை கடைப்பிடிப்பதே ஹிந்து தர்மம் என சொல்கிறது. ஆனால்  இஸ்லாமிய மதம் அவ்வாறு கூறவில்லை. ஆகையினால் தான் எங்கோ அரேபியாவில் இருந்த இஸ்லாமிய மதம் இங்கு வரை பரவி உள்ளது எனக் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com