98வது அகவையில் நல்லகண்ணு...சால்வை அணிவித்து வாழ்த்திய முதலமைச்சர்!

98வது அகவையில் நல்லகண்ணு...சால்வை அணிவித்து வாழ்த்திய முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் அவரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தகைசால் விருது பெற்ற நல்லகண்ணு:

விடுதலைப் போராட்ட வீரரான நல்லக்கண்ணு, 1938ம் ஆண்டு தொடங்கி பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் ஈடுபட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் ஆவார். தொடர்ந்து அவரைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தகைசால் தமிழர் விருது நல்லக்கண்ணுவுக்கு வழங்கப்பட்டது.

98வது பிறந்தநாள்:

இந்நிலையில் 98வது அகவையில் அடியெடுத்து வைக்கும் நல்ல கண்ணுவுக்கு, தியாகராய நகரில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லக்கண்ணுவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தார்.

தகைசால் தமிழர் விருதுக்கே பெருமை:

இதையடுத்து பேசிய முதலமைச்சர், நல்லக்கண்ணுவால் தகைசால் தமிழர் விருதுக்கே பெருமை என தெரிவித்தார். பொதுவாழ்வில் தூய்மை, எளிமை ஆகியவற்றுக்கான குறிச்சொல்  நல்லுக்கண்ணு என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், மாபெரும் பொதுவுடைமைப் போராளி எனவும் கூறினார்.

வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்:

இதைத்தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர்கள் பொன்முடி மற்றும் எ.வ.வேலு, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட ஏராளமானோர்  நல்லகண்ணுவுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து  வாழ்த்து கூறினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com