“மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

“மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல்   நாதக.  ஆர்ப்பாட்டம்  அறிவிப்பு..!

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்டோபர் 8 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி உரிமையை நிலைநாட்டத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடல் எதிரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க    | அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை நீதிமன்றம் கேள்வி ..!