புதிய அறிவிப்பு…! சிறையில் இருக்கும் மாணவர்களுக்காக…! 

புதிய அறிவிப்பு…! சிறையில் இருக்கும் மாணவர்களுக்காக…! 

சிறைவாசிகளுக்கு எழுத்தறிவு புகட்டும் வகையில் 26 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்மொழி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வருகின்ற கல்வியாண்டில் சுமார் 150 கோடி மதிப்பில் 7500 அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் எனத் கூறினார்.

மேலும்,296 அரசு நடுநிலைப்பள்ளிகளிலும்,  540 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள்; 175  கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். பின்னர் 13 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் விரிவுபடுத்தப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி என உருவாக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அறிவித்தார்.

இதனை அடுத்து பேசிய அவர் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் சிறைச்சாலைகளில் எழுதப் படிக்காத தெரியாத 1249 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில் சிறப்பு எழுத்தறிவு தி;ட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.  இத்திட்டத்திற்காக 26 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இதையும் படிக்க:  மாநில அரசு சுங்க கட்டணத்தை நீக்குமா? - அமைச்சரின் பதில் என்ன?