கர்நாடகா வழியாக லாரிகள் செல்லாது!

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெறுவதால் தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் அறிவுறுத்தியுள்ளார். 

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய தினம் கர்நாடக வழியாக சென்ற தமிழக லாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே வட மாநிலங்களுக்கு சென்று தற்போது தமிழகம் திரும்பும் லாரிகளை ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், தமிழகத்தைச் சேர்ந்த லாரி மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க; உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!