இந்தி தெரியாதது ஒரு குத்தமா...இப்படியா அசிங்கப்படுத்துவீங்க...வருந்திய காங்கிரஸ் எம்.பி!!!

இந்தி தெரியாதது ஒரு குத்தமா...இப்படியா அசிங்கப்படுத்துவீங்க...வருந்திய காங்கிரஸ் எம்.பி!!!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரிவினையை ஏற்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

பலவீனமான இந்தி:

நிர்மலா சீதாராமன் பேசும்போது "தெலுங்கானாவைச் சேர்ந்தவரது இந்தி பலவீனமாக இருப்பதாக கூறுகிறார்," என்று குறிப்பிட்டு கூறி "எனது இந்தியும் பலவீனமானது.  ஆனால் பலவீனமான இந்திக்கு பலவீனமான இந்தியால் பதிலளிப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.

நல்ல இந்தி தெரியாது:

இதையடுத்து, தனது மொழி குறித்து அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்று ரெட்டி கூறியுள்ளார்.  அவர் கூறும்போது "நான் ஒரு சூத்திரன், எனக்கு நல்ல இந்தி தெரியாது" என்றும் "அவர்கள் ஒரு பிராமண மேலாதிக்கவாதியாக இருக்கலாம்.  அதனால் மொழி அவர்களுக்கு நன்றாக இருக்கலாம்." என்று பேசியுள்ளார்.

வருத்தம் தெரிவித்த ரெட்டி:

இதையடுத்து, சீதாராமனின் கருத்து வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  அதாவது "பிரிட்டிஷர்களைப் போலவே, பாஜகவும் எப்போதும் பிரித்து ஆட்சி செய்யும் அரசியலையே பின்பற்றுகிறது," என்று அவர் கூறியுள்ளார்.  மேலும் “நாட்டு மக்களை மொழி, உணர்வு, சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துள்ளனர்.” எனவும் பதிவிட்டுள்ளார்.

எச்சரித்த பிர்லா:

"இங்குள்ள எவரும் இதுபோன்ற வார்த்தைகளை சபையில் பயன்படுத்தக்கூடாது.  இல்லையெனில், அத்தகைய உறுப்பினர் மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்." என்று மக்களவை சபாநாயகர் பிர்லா எச்சரித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ED ரெய்டுகளும்....நிரூபிக்கப்படாத கருத்துகளும்...