தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நோட்டீஸ்....!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நோட்டீஸ்....!
Published on
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யக் கூடாது, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என போக்குவரத்து கழக ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேளாண் இயக்குனர் இளங்கோவன் அவர்களை சந்தித்து சிஐடியு சங்கம் சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

அதில், அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம் உடனடியாக கண்ட்ராக்டு முறையில் பணி நியாமனம் செய்வது மற்றும் கிரேஸ் காண்ட்ராக்ட் முறையில் பேருந்துகளை ஓட்டுனர் வைத்து இயக்குவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றும், அதே நேரத்தில் காலி பணியிடங்களை 100% வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்களின் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. 

தொடர்ந்து, வரும் 3 ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை எனில் அடுத்த நாளே வேலை நிருத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com