பிரபல ரவுடி கல்லறை அப்பு வெட்டிக்கொலை;  காவல் நிலையத்திற்கு பின் புறம்  அரங்கேறிய கொடூரம்.! 

பிரபல ரவுடி கல்லறை அப்பு வெட்டிக்கொலை;  காவல் நிலையத்திற்கு பின் புறம்  அரங்கேறிய கொடூரம்.! 

சென்னை பல்லவன் சாலை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி அப்பு (எ) கல்லறை அப்பு (35).
இவர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரவுடி அப்பு தனது சொந்த ஆட்டோ ஓன்றை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் மெக்கானிக் கடை நடத்தி வரும் தனது நண்பர் விஜி(37) என்பவரிடம் தின வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆனால் விஜி இரண்டு மாதங்களாக வாடகை சரியாக தராததால் அப்பு அவரிடம் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் விஜி ஒழுங்காக வாடகை தந்துவிடுவதாக கூறியும் இதுவரை சரிவர வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி அப்பு இன்று மதியம் விஜி கடைக்கு சென்று வாடகை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.  இதில் ஆத்திரமடைந்த விஜி கத்தியால் ரவுடி அப்புவை சரமாரி குத்தி கொலை செய்து தப்பி சென்றார்.

பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அங்கு வந்த வில்லிவாக்கம் போலீஸார் அப்பு உடலை மீட்டு கே.எம். சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தப்பி ஓடிய மெக்கானிக் விஜியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் நடந்து வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை களைய முற்படவேண்டும் என முதலமைச்சர்  இன்று ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருக்கும் இந்த நிலையில், காவல்நிலையம் முன்பே இந்த கொலை சம்பவம் அறங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பின் மீதான ஐயத்தை ஏற்படுத்துகிறது. 

இதையும் படிக்க   | பாட்டிலுக்கு 10ரூ கூடுதல் என தட்டிக்கேட்ட மதுபிரியர்...கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்!!