ஒடிசா ரயில் விபத்து: காரணம் இதுதான் - அதிகாரிகள் விளக்கம்...!

ஒடிசா ரயில் விபத்து: காரணம் இதுதான் - அதிகாரிகள் விளக்கம்...!
Published on
Updated on
1 min read

ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் ரயிலுக்கான சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்புமுறையில் செய்யப்பட்ட மாற்றமே விபத்துக்குக் காரணம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒடிசாவில் 275 பேரை பலி கொண்ட ரயில் விபத்திற்கு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த தடத்தில் கோரமண்டல் விரைவு ரயில் மோதியதே விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகவும், ரயில் ஓட்டுநா் மீதும் தவறு இருந்திருக்கலாம் என்றும் முதலில் கூறப்பட்டது. 

இந்நிலையில், இது தொடா்பாக ரயில்வே வாரியத்தின் சிக்னல் பிரிவு தலைமை இயக்குநா் தெரிவிக்கையில், ரயிலுக்கான சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்புமுறையில் செய்யப்பட்ட மாற்றமே, விபத்துக்குக் காரணம் என தெரிவித்துள்ளனர். 

மேலும், கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பச்சை விளக்கு அனுமதி கிடைத்ததன்படி ஓட்டுநா் ரயிலை இயக்கியுள்ளதாகவும், ரயில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகத்திலும் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு, அந்த ரயிலின் அனுமதிக்கப்பட்ட வேகம் 130 கிலோ மீட்டர் வேகம் என்றும், விபத்து நடந்தபோது 128 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், விபத்தில் சிக்கிய மற்றொரு ரயிலான பெங்களூரு-ஹௌரா அதிவிரைவு ரயிலும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகமாகச் செல்லவில்லை என்றும் தெரிவித்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com