அட இது நல்லாருக்கே !!! காலி பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் 1 ரூபாய் !!!!

அட இது நல்லாருக்கே !!!  காலி பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் 1 ரூபாய் !!!!

காலி பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் முதல் முறையாக இன்று முதல் நெல்லை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது 

மேலும் படிக்க | பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மது நுகர்வோர் குறைவு - நிதியமைச்சர் பதில்

காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருநெல்வேலி மாநகராட்சியில் காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை பேரில் டவுன் சுகாதார அலுவலகத்தில் வைத்து சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்,நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்,என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது செங்கல்பட்டு நீதிமன்றம்

1  ரூபாய் பெற்றுக்கொள்ளும் திட்டம்

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் சோதனை ஓட்ட அடிப்படையில் நெல்லை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் ஒன்றான டவுண் பகுதியில் மட்டும் பொதுமக்கள், காலி பிளாஸ்டிக் பாட்டில்களை மாநகராட்சி அலுவலகங்களில் கொடுத்து 1  ரூபாய் பெற்றுக்கொள்ளும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 11 அலுவலகங்களிலும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்