மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்... திறனறி தேர்வு திட்டத்தின் கீழ்...!!!

மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்... திறனறி தேர்வு திட்டத்தின் கீழ்...!!!

Published on

திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெற்ற ஐ.ஐ.டி.எம் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அனைவருக்கும் IITM" என்ற திட்டத்தின்கீழ், 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார்.  “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு”என்ற புதிய திட்டத்தினையும் அவர் அப்போது அறிவித்தார்.

பின்னர், மேடையில் பேசிய முதலமைச்சர், கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால் அடுத்தடுத்து கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார். அனைவருக்கும் கல்வி - அனைவருக்கும் உயர்கல்வி என்பதை இலக்காக கொண்டு அரசு செயல்பட்டு வருவதைக் குறிப்பிட்ட முதலமைச்சர், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.  தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com