இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி...ட்வீட் செய்த ஜெய்சங்கர்...!

இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி...ட்வீட் செய்த ஜெய்சங்கர்...!

Published on

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதன்படி, சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் விமானம் ஆகியவை சூடானில் தயார் நிலையில் உள்ள நிலையில், சுமார் 500 இந்தியர்கள் போர்ட் பகுதியை அடைந்துள்ளனர்.

அதுகுறித்த புகைப்படைத்தை ட்விட்டரில் வெளியிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், அனைவரையும் மீட்பது தங்களது கடமை என தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com