புகார் எழாத வகையில் மின் கணக்கீடு செய்ய உத்தரவு!

புகார் எழாத வகையில் மின் கணக்கீடு செய்ய உத்தரவு!

புகார் எழாத வகையில் மின் கணக்கீடு செய்யுமாறு தமிழ்நாடு மினுற்பத்தி பகிர்மானக் கழகம் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின் அளவீட்டின் போது அதனை அளவீடு செய்யும் அலுவலர்கள் முறையான அளவீட்டிற்கு பதிலாக தன்னிச்சையான அளவுகளை குறிப்பதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. சில நேரங்களில் களத்திற்கே செல்லாமல் முந்தைய மாத கணக்கீடுகளை வைத்து தோராயமாக அளவீடுகளை குறிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனை தடுக்கும் வைகையில்  தமிழ்நாடு மினுற்பத்தி பகிர்மானக் கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மின் அளவீட்டின் போது புகார்கள் வராதாவாறு கணக்கிடுமாறு தமிழ்நாடு மினுற்பத்தி பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கள ஆய்வு செய்யும் அலுவலர்கள் ஆய்வு செய்யும் நாட்களை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் பின்னர் அவற்றை அதிகாரிகள் 10 விழுக்காடு இணைப்புகளை தேர்வு செய்து சோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மின் கணக்கீட்டின் துல்லியதன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வேர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்க முடியும் எனவும், இனி வரும் காலங்களில் புகார்கள் இருக்கா வன்ணம் செயலாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக திரிஷா!