”சாலை தோண்டும் பணிகளை இன்றுடன் நிறுத்த வேண்டும்” - தமிழ்நாடு அரசு உத்தரவு

”சாலை தோண்டும் பணிகளை இன்றுடன்  நிறுத்த வேண்டும்” -  தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னையில் இன்றுடன் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  

வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கையாக சாலைகளில் தோண்டப்படுவதை தவிர்க்க வேண்டி தமிழ்நாடு அரசு இன்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.

பருவ மழை தொடங்குவதற்கு முன்னரே சமீப  காலங்களாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக இடங்களில் மழை பெய்து வருவதால், ஆங்காங்கே சாலைகளில் நீரானது தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். 

மழைநீர் வடிகால் பணிகளுக்காகவும், மெட்ரோ பணிகளுக்காகவும் சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது. இவற்றால் ஏற்கனவே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இதனால்  பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெருமளவில்  அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு தமிழ்நாடு மின்சார வாரியம், மற்றும் பேருந்து செல்லும் சாலைகள் உட்புறச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்றுடன் நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இக்காலங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலையை தோண்டும் பணி மேற்கொள்ள கூடுதல் தலைமைச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com