நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது பாமக...!

நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது பாமக...!
Published on
Updated on
1 min read

தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் 80 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சார்பில் தயாரிக்கப்பட்ட நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், எந்த கட்சியும் செய்யாத ஒரு செயலாக இந்த நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருவதாகவும், 131 தலைப்புகளில் 516 கருத்துகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக்வும் கூறினார்.

மேலும், இளைஞர்களை அழிவுப் பாதையிலிருந்து மீட்டு ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்ல இந்த நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com