கடலில் கவிழ்ந்த பயணிகள் கப்பல்...!!

கடலில் கவிழ்ந்த பயணிகள் கப்பல்...!!

ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டில் லெய்த் என்ற பகுதியில் உள்ள கப்பல் நிறுத்தும் இடத்தில் பெட்ரல் என்ற கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது.   இந்த கப்பல் பயணிகள் கப்பலாகும்.  ஓய்விற்காக இந்த கப்பல் லெய்த் என்ற பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.  பயணிகள் அனைவரும் கப்பலுக்குள் இருந்த நிலையில் நிலையில், கப்பல் திடீரென காற்றின் எதிர் திசையில் சரிந்து நீருக்குள் கவிழ்ந்துள்ளது.  

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள்  அலறி கத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு விரைவாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ரஷ்யா உக்ரைனை விட தரவரிசையில் பின்தங்கிய இந்தியா...!!!