பட்டா நிலத்தை இப்படி பயன்படுத்த முடியாது..! - சென்னை உயர்நீதி மன்றம்.

பட்டா நிலத்தை இப்படி பயன்படுத்த முடியாது..! - சென்னை உயர்நீதி மன்றம்.


திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மாயனம் உள்ள நிலையில்,  ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்தாகவும்,  புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க  ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த மனுவானது, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது,  ஜெகதீஷ்வரி தரப்பு வழக்கறிஞர், உடல் புதைக்கப்பட்ட நிலம் மனுதாரருக்கு சொந்தமானது அல்ல எனவும் நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடு தான் உடல் புதைக்கப்பட்டதாக கூறினார். 

இதையடுத்து,  உடலை புதைக்க நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது என உத்தரவிட்டார். மேலும்,  கிராமத்தில் மயானம் இல்லை என்றால், அரசு நிலத்தை கண்டறிந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் தான் அந்த நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க    }  மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?

மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை, உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைக்காக பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க    } குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை...சிறுமியை சாட்சிக்கு அழைக்கும் ஆளுநர் - மா.சுப்பிரமணியன் பேட்டி!