மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.....மா. சுப்பிரமணியன் தகவல்!!

மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.....மா. சுப்பிரமணியன் தகவல்!!

அரசு மருத்துவமனையின் சேவையைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள், கடந்த 3 ஆண்டுகளை விட தற்போது அது இரண்டரை மடங்கு உயர்ந்து உள்ளது என சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நோயாளிகள் குறைதீர்க்கும் மையம்:

சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, எம்ஆர்எப் நிறுவனம் வழங்கும் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் நோயாளிகள் குறைதீர்க்கும் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மருத்துவமனைகளில்:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவ மனைகளிலும் குறை தீர்ப்பு முகாம் திறக்கப்பட்டு வருகிறது எனவும் அந்த வகையில் ஸ்டான்லி மருத்துவமனையில் குறை தீர்ப்பு முகாம் திறக்கப்பட்டுள்ளதாகவும் ரோட்டரி சங்கம் சார்பில் கடந்த ஆண்டு வரை  சைதாப்பேட்டை மாதாவரம் ஆகிய இடங்களில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.  

அதிநவீன உபகரணங்கள்:

மேலும் அவர் அங்கு 60 லட்சம் மதிப்பிலான மார்பக புற்றுநோய் கண்டறியும் ஊடுகதிர் பரிசோதனை கருவியை ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளதாகவும், ரூபாய் 38 லட்சம் மதிப்பிலான கண்புரை நீக்கும் இயந்திரம், கண் அறுவை சிகிச்சைக்கான நுண்ணோக்கி ஊடுளி இயந்திரம் உயர் வேதியல் பகுப்பாய்வு இயந்திரம் ஆகிய கருவிகளை இந்த மருத்துவமனைக்கு 25 லட்சம் செலவில் வழங்கி உள்ளதாகவும் கூறிய அவர் அறுவை சிகிச்சை இயந்திரங்களை சுத்தம் செய்யும் அதிநவீன உபகரணங்கள் 58 லட்சம் செலவில் மருத்துவ சேவைகள் கழகம் வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

முகக்கவசம்:

மருத்துவமனைகளில் மட்டுமே முகக்கவசம் கட்டாயமாக உள்ளது எனவும் மற்ற இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு சென்றால் நல்லது எனவும் கூறிய அவர் தற்போது பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு குறைவு இதனால் பெரிய பதற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது கிடையாது எனவும் சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

இதையும் படிக்க:   சிக்சரை பறக்கவிட்ட சிஎஸ்கே... தோல்வியை தழுவிய கொல்கத்தா...!!!