திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி....!!!

திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி....!!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டிய நிலையில் வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. காட்பாடி, விரிஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, பெரியதள்ளபாடி, கோவிந்தபுரம், மகனூர்பட்டி, மிட்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.  இதனால் விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக மாலை நேரத்தில் மழை பெய்தது.  ஓரிக்கை, செவிலிமேடு,  சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரளி, வத்திபட்டி, கோவில்பட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி, உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று, இடி, மின்னனுடன் 2 மணி நேரமாக மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com