விருதுநகர் மக்களே வெளியில் போகாதீங்க

விருதுநகர் மக்களே வெளியில்  போகாதீங்க

விருதுநகரில் கோடை வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் இந்த முறை கோடைகாலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி விட்ட சூழலில், விருதுநகரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது‌. மதுரை, கோவை போன்ற நகரங்களில் வெப்பநிலை சதம் அடித்து வரும் நிலையில் விருதுநகரிலும் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி 3 நாட்களாக வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

அத்தோடு சேர்த்து மதிய வேளையில் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் வெளியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை பகல் நேரத்தில் 100 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலை இருந்து வரும் நிலையில், இனி வரும் நாட்களிலும் இதே வெப்பநிலை நீடிக்கும். மழையை பொருத்தவரை இதுவரை மழை ஏதும் பதிவாகாத சூழலில் இதேநிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 500 க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு


வெளியில் செல்ல வேண்டாம் :

மேலும் தற்போது மதியம் 12 மணி முதல் மாலை 4 வரை அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மேற்சொன்ன நேரங்களில் வெளியில் கூடுமான வரை தவிர்த்து விடுவது நல்லது.