மின்வாரிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்!!

மின்வாரிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்!!

மின்வாரிய ஊழியர்கள் செவ்வாய்கிழமை முதலமைச்சரை சந்திக்கவுள்ள நிலையில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என்று மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மின்வாரிய பணியாளர்கள் முதலமைச்சரை சந்திக்க பேரணியாக செல்லவுள்ளதாக அறிவித்திருந்தனர்.  பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணியாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்கவுள்ளனர். 

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று எச்சரித்துள்ள மின் வாரியம் பணிக்கு வந்தோர் வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள் வழங்க உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கைகள்:

நிரந்தரமான பணிகளை அவுட்சோர்சிங் முறைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு. 

மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்க:   மிகப்பெரிய ஏக்கம் இன்றைய நிகழ்ச்சியின் மூலம் தீர்ந்தது....அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!