' பிளவுபடட்டும் இந்த பூமியும் ஆகாயமும் ' வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர்...!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் 5 மொழிகளில் வெளியானது.

' பிளவுபடட்டும் இந்த பூமியும் ஆகாயமும் ' வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர்...!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி கடந்த 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ராமராக நடித்துள்ள பிரபாஸுடன் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

இந்நிலையில், படத்தின் டீசர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவித்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் வெளியானது. ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் இந்த திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீருக்கு அடியில் தியான நிலையில் இருக்கிறார் பிரபாஸ். அப்போது ' பிளவுபடட்டும்  இந்த பூமியும், ஆகாயமும் ' என்ற கம்பீர குரலில் தொடங்குகிறது படத்தின் டீசர். 300 முதல் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.