மர்மமான முறையில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்..!!

மர்மமான முறையில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்..!!

ஓமலூர் அருகே திருமணமான ஆறு மாதத்தில் 5 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவில் முத்தம்பட்டி கிராமம் உள்ளது.  அங்கு வசிக்கும் மணிகண்டன், செங்கல் சூலை வைத்தும், லாரி வைத்தும் தொழில் செய்து வருகிறார்.  இவருக்கு பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் கோபிகாஸ்ரீ என்ற இளம் பெண்ணை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.  தற்போது கோபிகாஸ்ரீ ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார்.  இந்த நிலையில் கோபிகாஸ்ரீ யின் கணவர் வீட்டில் இருந்து கோபிகாவின் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.  அதில், உனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் உறவினர்கள் சென்று பார்த்தபோது கோபிகா பிணமாக கிடந்தார். 

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு சென்ற தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அப்போது கோபிகாவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களது பிள்ளையை அடித்து கொலை செய்துள்ளனர். அதனால், உடனடியாக மணிகண்டன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வேண்டும் என்று கூறி காவல் நிலையம் முன்பாக ஒன்று கூடினர். அப்போது ஆம்புலன்ஸில் இருந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல் தடுத்து தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  பிரேத பரிசோதனைக்கு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.  மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோபிகாவின் பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் மணிகண்டன் கூறியதாகவும், அதற்கு மறுத்த கோபிகாவை அவரே கொண்டு வந்து விட்டு சென்ற நிலையில், கணவருக்கு தெரியாமல் வீட்டிற்கு சென்ற கோபிகா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.  இதனிடையே கோபிகாவின் கணவர் மற்றும் மாமியார் கோபிகாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாவும், இந்த நிலையில் கோபிகா மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும், அதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளனர்.  இதையடுத்து உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:   சுற்றுசூழல் மாசுபாட்டால் குழந்தையின்மை பாதிப்பா....!!