விமான நிலையம் கட்டப்படாது என கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரதமர்!

விமான நிலையம் கட்டப்படாது என கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரதமர்!

அருணாச்சல பிரதேச மாநிலம் இட்டா நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

பசுமை விமான நிலையம்:

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டா நகரில் 640 கோடி ரூபாய் மதிப்பில், 690 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், காற்றாலை மின்வசதி உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் நவீன முறையில் விமான நிலைய அலுவலக கட்டிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தொடங்கி வைத்த பிரதமர் மோடி:

இதையடுத்து மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையமான, டோனி போலோ விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தி திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். 8 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நீர் மின்திட்டம், மேற்கு காமெங் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம் கட்டப்படாது என கூறியவர்களுக்கு பதிலடி:

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த மின் திட்டம் மத்திய அரசின் இலக்கிற்கு கூடுதல் வலு சேர்க்கும் என தெரிவித்தார். தொடர்ந்து, தேர்தலையொட்டி விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியதாகவும், விமான நிலையம் கட்டி முடிக்கப்படாது எனவும் விமர்சித்தவர்களுக்கு இது ஒரு பதிலடி எனவும் கூறினார்.  மேலும், அடிக்கல் நாட்டிய திட்டப்பணிகளை நிறைவு செய்து தொடங்கி வைக்கும் கலாச்சாரத்தை இந்த அரசு கொண்டு வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com