நாட்டின் அரசராக விளங்கும் பிரதமர்..!!

நாட்டின் அரசராக விளங்கும் பிரதமர்..!!

Published on

நாட்டின் அரசராக பிரதமர் விளங்குகிறார் எனவும் அனைத்து சமயம், மதத்தினருக்கு தர்ம தேவதையாக செங்கோல் தரப்படுகிறது என தருமபுரம் ஆதீனம் பேட்டியளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புதிய பாராளுமன்ற  கட்டிட திறப்பு விழாவிற்கு செல்லும் முன் தருமபுரம் ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

மன்னவனாய் தென் மதுரை செங்கோல் செலுத்தும் தன் மதுரை நீ அளவோ என்று திருஞான சம்பந்தர் அருளிய வண்ணம் பாராளுமன்ற கட்டிடம் நாளை திறக்க உள்ளது எனவும் அற்புதமான  கட்டிட வடிவமைப்பை செய்து பிரதமர் திறந்து வைக்க உள்ளார் எனவும் கூறிய அவர் 300 ஆண்டுகளுக்கு தருமை ஆதீனத்தின் சார்பில் காசியில் இருந்து ஆளுமை செய்த போது குமரகுருபரரை சிங்கத்தின் மீது அரசபைக்கு அனுப்பி வைத்தோம் எனவும் மீண்டும் மோடியை புதிய பாராளுமன்ற  கட்டிடத்திற்கு அனுப்பி வைக்க செல்கிறோம் என தெரிவித்தார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com