பள்ளி திறப்பு குறித்து மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் - அன்பில் மகேஸ் !!

பள்ளி திறப்பு குறித்து மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் - அன்பில் மகேஸ் !!
Published on
Updated on
1 min read

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில்...

பள்ளி திறப்பு 

திட்டமிட்டபடி 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 1ம் தேதி பள்ளி திறக்கப்படும். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை வரும் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தாலும் பள்ளி திறப்பு குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார்.

புத்தகங்கள் கையிருப்பில் உள்ளது. பள்ளி திறந்தவுடன் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் படிப்பை அதிக கட்டணம் என வசூலித்து படிப்பை தடுத்து விடாதீர்கள். தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பள்ளியில் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.

தனியார் பள்ளி வாகனங்களை முறையாக சோதனை இட்ட பிறகு தான் பயன்படுத்தப்படுத்த அறிவித்துள்ளோம்.பெரும்பிடுகு முத்திரையருக்கு மணி மண்டபம் திறக்க கேட்டு இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர் இதை முதல்வரிடம் தெரிவிப்போம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com