புழல் மத்திய சிறையில் 'சிறை அதாலத் நிகழ்வு' ...!

புழல் மத்திய சிறையில் 'சிறை அதாலத் நிகழ்வு' ...!
Published on
Updated on
1 min read

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளின் எண்ணிக்கையை குறைத்திடும் வகையில் சிறை அதாலத் நிகழ்வு நடைபெற்றது. 

சென்னை புழல் மத்திய சிறை இரண்டு  சிறையினுள் சிறைவாசிகளில் எண்ணிக்கையை குறைத்திடும் பொருட்டு சிறைவாசிகளுக்கு சிறை அதாலத் நிகழ்வு நடைபெற்றது . இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணை குழு கௌரவ செயல் தலைவர் எஸ் .வைத்தியநாதன் தலைமையில் உயர்நீதிமன்ற நீதி அரசர்  எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் நசீர் அஹமத்  உட்பட 20க்கும் மேற்பட்ட நீதிமன்ற நடுவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, சிறைக் கைதிகளின் வழக்குகளை ஆராய்ந்து சிறை அதாலத் மூலம் பிணையில்  செல்ல இயலாமல் சிறையில் இருக்கும் சிறு வழக்குகளில் ஈடுபட்ட சிறைவாசிகளின் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் செய்தி குறிப்பில் தெரியப்படுத்துகிறது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறையில் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் குஜராரி சென்னை சரக டி ஐ ஜி முருகேசன் சிறைக் கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன் மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர்கள் உடனிருந்தனர். இதில் ஏராளமான கைதிகளுக்கு தீர்வு காணப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com