பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
Published on
Updated on
1 min read

வால்பாறையில் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் மருத்துவமனையில் அனுமதி.


கோவை மாவட்டம் வால்பாறையில் ஸ்டான்மோர் ஜங்ஷன் பகுதியில் செயல்படும் அரசு தொடக்க பள்ளியில்  1 முதல் 5 வகுப்பு வரை மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதிய உணவு வழங்க பட்டது. அதை சாப்பிட்ட மாணவ மாணவியர்கள் 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து குழந்தைகளையும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டும் மருத்துவமனைக்கு வந்து தங்கள் குழந்தைகளை அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.

மேலும் இதுபற்றி தொடக்க கல்வி அலுவலர், வட்டாட்சியர், நகராட்சி தலைவார், மற்றும் அரசியல் கட்சியினர் பார்வையிட்டும் விசாரித்து வருகின்றனர். இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது இங்கு சுத்தமான குடிநீர் இல்லை மழை பெய்து வருவதால் தூசி படர்ந்து கருப்பு நிறத்தில் தண்ணீர் வருவதாக கூறப்பட்டுள்ளதாக காவல் துறை முதல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப் பு ஏற்பட்டுள்ளது தொடர் சிகிச்சை நடை பெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com