ஆளுநருக்கு எதிராக பேனர்...அகற்றக்கோரியதால் இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு...!

ஆளுநருக்கு எதிராக பேனர்...அகற்றக்கோரியதால் இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு...!
Published on
Updated on
1 min read

ஆளுநருக்கு எதிரான பேனரை அகற்ற வலியுறுத்தியதால்  காவல் துறையினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சென்னை தங்க சாலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்காக இயற்றப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, ஆளுநர் செயலை சித்தரிக்கும் விதத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதில், ஆளுநர் காவி வேட்டி அணிந்திருப்பது போன்றும்,  அவருக்கு பின்னால் சீட்டு கட்டுகள் அடிக்கி வைத்தது போன்றும், ஆளுநரின் காலுக்கு கீழே மண்டை ஓடுகளும், பலர் தூக்கில் தொங்குவதும் போன்றும் பேனர்கள்  வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக்கோரியதால், காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதாம் ஏற்பட்டு, பின்னர் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com