வெற்றிக்கு பின் கண்ணீருடன் ராகுல் பேட்டி...!!

வெற்றிக்கு பின் கண்ணீருடன் ராகுல் பேட்டி...!!

கர்நாடக மக்கள் முதலாளித்துவ அரசை வீழ்த்தியுள்ளனர் என சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி குறித்து ராகுல் காந்தி உற்சாகத்துடன் பேட்டியளித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சித் தலைவர்கள் நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்து வருகின்றனர். தேர்தல் வெற்றிக்குப்பின் முதன்முறையாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும், தேர்தலில் பாஜக வெறுப்புப் பிரசாரத்தால் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் அன்பை தேர்ந்தெடுத்ததாகவும் குறிப்பிட்டார். ஏழைகளின் பலம் முதலாளித்துவ சக்திகளை தோற்கடித்ததாகவும் இது அனைத்து மாநிலங்களில் நடக்கும் எனவும் கூறினார்.

கனகபுரா தொகுதியில் வெற்றிபெற்று முதன்முதலாக செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், கர்நாடகாவில் காங்கிரசை வெற்றிபெற வைப்பேன் என்ற சபதத்தை நிறைவேற்றியுள்ளேன் என தெரிவித்தார். காங்கிரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், இது தொண்டர்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனவும் அவர் கண்ணீர் மல்கக் கூறினார். 

மைசூருவில் பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, இதுவரை இல்லாதளவு ஒரு பிரதமர் 20 முறை மாநிலத்திற்கு வந்து பிரசாரம் செய்தும் மக்கள், காங்கிரசை தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறினார். பாஜக ஆட்சியால் அலுத்துப் போன மக்கள், மாற்றத்தை விரும்பியதாகக் கூறிய அவர், புதிய முதலமைச்சரை தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் முடிவு செய்வர் என குறிப்பிட்டார்.  

இதேபோல் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரசுக்கு மகத்தான பணியை கர்நாடக மக்கள் வழங்கியுள்ளதாகவும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனக் கூறினார். வெற்றி பெற்றுள்ளதால் இது உழைப்பதற்கான நேரம் என குறிப்பிட்ட அவர், யாரையும் தற்போது விமர்சிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க:  டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளோம்.... பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம்!!