தண்டவாளம் அமைக்கும் இயந்திரம் கவிழ்ந்து...! சென்னையில் இரயில் சேவை பாதிப்பு...!!

தண்டவாளம் அமைக்கும் இயந்திரம் கவிழ்ந்து...! சென்னையில் இரயில் சேவை பாதிப்பு...!!

அச்சரப்பாக்கம் அருகே ரயில்வே தண்டவாளம் அமைக்கும் இயந்திரம் கவிழ்ந்ததால் சென்னையில் இருந்து தென் மாவட்டம் செல்லக்கூடிய ரயில்களும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் தாமதமாகியள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதாவது பழைய இரும்பு தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய இருப்பு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்டவாளம் மற்றும் சிமெண்ட் கட்டைகள் அமைக்கும் இயந்திரம் நிலை தடுமாறி ரயில் இருப்பு பாதையில் கவித்துள்ளது.

இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் ரயில்வே பயணிகள் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து செல்லக்கூடிய சோழன் விரைவு வண்டி குருவாயூர் விரைவு வண்டி பாண்டிச்சேரி பயணிகள் விரைவு வண்டி ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. கவிழ்ந்த இயந்திரத்தை கிரேன்களை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.