தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மழை... மழைபொழியும் மாவட்டங்கள்?!!!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மழை... மழைபொழியும் மாவட்டங்கள்?!!!

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.  

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு, போரூர், வடபழனி, ஆயிரம்விளக்கு மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, பூவிருந்தவல்லி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பெய்துள்ளது.. 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.  கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால்,வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாயினர்.  பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ததால், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

சூளகிரியில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது.  இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  சூளகிரி, ஓசூர், பாகலூர், காமன்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும், சூளகிரி வட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் கொட்டித் தீர்த்துள்ளது.

இதேபோல், ஓசூர், உத்தனப்பள்ளி, பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.  உத்தனப்பள்ளி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் ஆர்வமுடன் பொதுமக்கள் பாத்திரத்தில் அள்ளிச் சென்றனர்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்து வருகிறது.  ஒருசில பகுதிகளில் இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படிக்க:   இது 140 கோடி மக்களின் பலத்தை காட்டுகிறது...!!!