விஜய் குரலில் " ரஞ்சிதமே " பாடல்...! இணையத்தை கலக்கி வரும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்...!

விஜய் குரலில் " ரஞ்சிதமே " பாடல்...! இணையத்தை கலக்கி வரும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்...!
Published on
Updated on
2 min read

நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி வரும் திரைப்படம் தான் வாரிசு . தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது .

நடிகர் கார்த்தியின் தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாரிசு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு கமர்சியல் திரைப்படம். தெலுங்கு படங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என அனைத்து நேர்காணல்களிலும் கூறிய ராஷ்மிகா மந்தனா, முதன் முறையாக இந்த படத்தின் மூலம் தளபதி விஜய்யுடன் நடிக்கிறார்.   

பொங்கலுக்கு வெளியாக இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது குறித்த ப்ரோமோ கடந்த இரு தினங்களுக்கு முன்பு ( நவ.3 ) வெளியானது. அதில் தளபதி விஜய் குரலில் 'ரஞ்சிதமே' பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை இந்த பாடலின் லிரிச்சல் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 5.30 மணிக்கு வெளியானது. முன்னதாக மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடல், பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம்கானா பாடல் என அவரது குரலில் வெளியான பாடல்கள் பலவும் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜானி மாஸ்டர் கோரியோவில், பாடலாசிரியர் விவேக் வரிகளில், "கட்டு மல்லி கட்டி வச்சா.. வட்ட கருப்பு போட்டு வச்சா.."  என தொடங்கும் இந்த பாடல், வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே 1.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. மேலும் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். 

-- சுஜிதா ஜோதி

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com