வெகுவாக குறைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை...!!!

வெகுவாக குறைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை...!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.  மேலும் 4 அடிப்படை தத்துவங்கள் அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வதாகவும் கூறியுள்ளார்.  தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் நிதிநிலை சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 62000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இந்த நிதி ஆண்டில அது மேலும் குறைக்கப்பட்டு 30000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர் வருங்காலங்காலங்களில் வருவாய் பற்றாக்குறையை படிப்படியாக குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  மதச்சார்பற்ற என்கிற ஒற்றை வரியில் ....!!!